ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமையவுள்ள இடத்தை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு!

0 644
Stalin trichy visit

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைகின்ற இடத்தினையும், மேற்கொள்ளப்பட
வேண்டிய திட்டங்களின் வரைபடத்தினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இந்நிகழ்வின் போது நகராட்சி நிர்வாக இயக்குனர் எஸ்.பொன்னையா,

மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு, மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின்குமார், எஸ்.இனிகோ இருதயராஜ், துணை மேயர் ஜி.திவ்யா, மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ. முஜிபுர் ரகுமான் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.