திருச்சி டிஐஜி தடாலடி…

0 393
Stalin trichy visit

திருச்சி  மாவட்டத்தில்  கள்ளச்சாராயம்  மற்றும்  போலி  மதுபானம்  தயாரிப்பவர்கள் மற்றும்  வெளிமாநில  மதுபானங்களை  கடத்துதல்  உள்ளிட்ட  குற்றச்  செயல்களில் ஈடுபடுவோர்  மீது  குண்டர்  சட்டத்தின்  கீழ்  நடவடிக்கை  எடுக்க  வேண்டும் என மதுவிலக்கு  பிரிவு  போலீசாருக்கு  திருச்சி  சரக  டிஐஜி  சரவண சுந்தர்  உத்தரவு  பிறப்பித்து  உள்ளார்.

திருவெறும்பூரில்  உள்ள  மதுவிலக்குப்  பிரிவு  காவல்  நிலையத்தை  திருச்சி  சரக  டிஐஜி சரவணசுந்தர்  இன்று  ஆய்வு  செய்தார். அப்போது  மதுவிலக்கு  பிரிவு  காவல் துறையினருக்கு,  சட்ட  பிரிவு 110  குற்றவியல்  நடைமுறை  சட்டத்தின்  கீழ் தொடர் குற்றங்களை  ஈடுபடுபவர்களை கண்காணித்து  நடவடிக்கை  எடுக்கவும்,  கள்ளச்சாராயம்  காய்ச்சுதல்,  போலி  மதுபாணங்களை தயாரித்தல்,  வெளிமாநில  மது  பாட்டில்களை  கடத்தி  தமிழகத்தில்  விற்பனை செய்பவர்கள்  மீது  குண்டர்  சட்டத்தின்  கீழ்  நடவடிக்கை எடுக்க  வேண்டும்  என  உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திருவெறும்பூர்  பகுதியில்  உள்ள  நலிந்த  குடும்பங்களை  சேர்ந்த  5  பெண்களுக்கு  அரிசி மளிகை  பொருட்கள்  மற்றும்  காய்கறிகள்  அடங்கிய  தொகுப்பினை  வழங்கினார்
அப்பொழுது  மதுவிலக்கு  பிரிவு  திருச்சி  டிஎஸ்பி  முத்தரசு  திருவெறும்பூர்  மதுவிலக்கு பிரிவு  இன்ஸ்பெக்டர்  மீராபாய்  மற்றும்  மதுவிலக்கு  பிரிவு  காவலர்கள்  உடன்  இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.