“அரசு பஸ் டிரைவர், கண்டக்டரிடம் கடைகாரர் வாக்குவாதம்” போக்குவரத்து பாதிப்பு!

0 302
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே அண்ணாவி நகரை சேர்ந்த அப்துல் ரஹீம் மகன் இப்ராகிம்(வயது32) இவர், தாசில்தார் ஆபீஸ் எதிரே திருச்சி ரோட்டில் கடை வைத்துள்ளார். இதனிடையே பழனியிலிருந்து மணப்பாறை வழியாக திருச்சி சென்ற அரசு பஸ் தாசில்தார் அலுவலகம் எதிரே சென்றது. அப்போது ஒன்வே ரோட்டில் வந்த கடைக்காரர் இப்ராகிம் எதிரே வந்த அரசு பஸ்ஸைகவனிக்காமல் சென்றுள்ளார். தொடர்ந்து அரசு பஸ் டிரைவர் சரவணன் என்பவரின் சாமுர்த்தியத்தால் விபத்து ஏற்படாமல் பஸ்ஸை நிறுத்தியுள்ளார். இதனையடுத்து

 

அரசு பஸ் கண்டக்டர் அழகேசன் மற்றும் டிரைவர் சரவணன் ஆகியோரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட கடைகாரர் இப்ராகிம், கண்டக்டரின் சட்டையை பிடித்து இழுத்து அடிக்க முயன்றதாக கூறப்ப டுகிறது. இதனால் பதற்றமடைந்த கண்டக்டர் அழகேசனை அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக சேர்க்கபட்டார். இதனை தொடர்ந்து அரசு பஸ் கண்டக்டர் மற்றும் டிரைவர் மணப்பாறை போலீசில் புகார் அளித்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோரிடையே கடைக்காரர் வாக்குவாதம் செய்ததன் காரணமாக நடுரோட்டில் நின்ற அரசு பஸ்ஸால் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.

Leave A Reply

Your email address will not be published.