46வது வார்டு கவுன்சிலர் ரமேசுக்கு பொதுமக்கள் நன்றி!
திருச்சி மாநகராட்சி 46வது வார்டு பொன்மலையடிவாரம் ரேஷன்கடை தெருவில் உள்ள கைப்பம்பு பல வருடங்களாக வேலை செய்யாமல் பயனற்று இருந்தது. இதனை 46வது வார்டு மாமன்ற உறுப்பினர் கோ.ரமேஷ்

நேற்று ஆய்வு செய்தார். இதையடுத்து பணியாளர்களை கொண்டு அதனை சரி செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். வெயில் காலத்தில் தண்ணீருக்கு அவதிப்படும் இந்த வேளையில் கை பம்பை சரி செய்து கொடுத்த மாமன்ற உறுப்பினர் கோ.ரமேஷுக்கு பொதுமக்கள் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.