வரதட்சணை கேட்டு மனைவிக்கு கத்திக்குத்து!

0 303
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் அருகே உள்ள கீழமஞ்சமேடு மாந்தோப்பு தெருவை சேர்ந்தவர் மருதமுத்து. இவரது மனைவி நித்தியா(வயது 26). இந்த தம்பதிக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நித்தியாவின் கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி அடிக்கடி நித்யாவின் பெற்றோர்களிடம் வரதட்சணை கேட்டு வாங்கி வருமாறு நித்யாவை அடிக்கடி துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வரதட்சணை கேட்டு நித்தியாவின் கணவர் துன்புறுத்தியதால் கணவன்,

 

மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு இதில் கணவர் கத்தியால் குத்த வரும்போது வலதுகையால் நித்தியா தடுத்துள்ளார். வலது உள்ளங்கையில் ரத்த காயம் ஏற்பட்டு தொட்டியம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக தொட்டியம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு, நித்தியா காட்டுப்புத்தூர் காவல்நிலைய போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தின் பேரில் காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வரதட்சணை கேட்டு மனைவியைக் கொடுமைப்படுத்தி தாக்கி ரத்த காயம் ஏற்படுத்திய கணவனை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.