“சிறுவர்களை ஏமாற்றும் செல்வநகர் பூங்கா” மேயர் அன்பழகன் நடவடிக்கை எடுப்பாரா? எதிர்பார்க்கும் மக்கள்!

0 270
Stalin trichy visit

திருச்சி மாநகராட்சி செல்வநகர் கலைவாணர் தெருவில் செல்வ நகர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் சுற்றி பகுதியைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகள் மாலைநேரத்தில் வந்து விளையாடி மகிழ்ந்தனர். இந்தநிலையில் இங்கு உள்ள உபகரணங்கள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்டு வருகிறது. மேலும் ஊஞ்சல் பகுதியில் கிரீஸ் போன்றவை தரப்படாமல் உள்ளதால் அவற்றில் சிறுவர்கள் அமர்ந்து ஆடும் போது பயங்கர சத்தம் வருகிறது. இதனால் அருகில்

வீடுகளில் வசிக்கும் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது இந்த சிறுவர் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள சறுக்கு போன்றவை இரண்டும் உடைந்த நிலையில் காணப்படுகின்றன. தினமும் ஏராளமான குழந்தைகள் வந்து விளையாடும் இந்த பூங்காவை அதிகாரிகள் கருத்தில் கொண்டு சீரமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பூங்காவை சுற்றி அமைக்கப்பட்டுள்ள மின் கம்பங்களும் பாதுகாப்பற்ற முறையில் காணப்படுவதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே இதுகுறித்து திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் விரைந்து நடவடிக்கை எடுத்து இதனை சரிசெய்வாரா? என இப்பகுதி மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.