கார் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பெண் வழக்கறிஞர் அவரது மகளும் பரிதாபமாக உயிரிழப்பு
கரூர் கோசூர் தொண்டைமாங்கனம் சந்தையூர் பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம்(43) வழக்கறிஞர் இவரது மனைவி பழனியம்மாள் (42)வழக்கறிஞர் அவரது மகள் சாதனா (14) மகன் எஸ்வந்த் (3) மற்றும் உறவினர்கள் விசுவநாதன் (43) தமிழ்செல்வி (38)கிருத்திகா(25) ஆகிய 7 பேரும் குரு பெயர்ச்சியை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி கோவிலுக்கு வழிபாடு செய்வதற்காக காரில் வந்து உள்ளனர்.அப்படி கோவிலுக்கு செல்லும் வழியில் திருவெறும்பூர் அருகே திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகே சென்றபோது மதுரையையில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பேருந்து பயங்கரமாக மோதியுள்ளது.இதில் பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார், காயமடைந்த 6 பேரில் சாதனாவை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்து உள்ளார் மற்ற5 பேரை திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்.இதில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட சாதனா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அரசு பஸ் டிரைவர் மற்றும் நடத்துனரை தேடி வருகின்றனர்.
