என் ஐடி கல்லூரி  மாணவி விடுதிக்குள் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை

0 483
Stalin trichy visit

திருவெறும்பூர் அருகே உள்ள என் ஐடியை கல்லூரியில் மாநில அளவில் மட்டுமல்லாமல் அகில இந்திய அளவிலும், சர்வதேச அளவிலுமான மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.அப்படி பயின்று வரும் மாணவ மாணவிகள் என் ஐடி கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக ஆந்திர மாநிலம் காக்கிநாடா பான்குடியை சேர்ந்த அவளாசவுமியா தேவி (20)என்ற மாணவிகல்லூரி விடுதியில் தங்கி பிடெக் சிவில் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.மேலும் அவளாசௌமியா தேவி தடகள வீராங்கனை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அவருடன் திருவாரூரைச் சேர்ந்த தீட்சனா என்ற சக மாணவி ஒருவரும் தங்கி கல்வி பயின்று வருகிறார்.இந்த நிலையில் நேற்று கல்லூரி விடுமுறை என்பதால் தீட்சனா வெளியில் சென்றுள்ளார். இந்த நிலையில் அவளா சௌமியா தேவி மட்டுமே விடுதி அறையில் இருந்துள்ளார்.இந்த நிலையில் வெளியில் சென்றிருந்த தீட்டுனா நேற்று இரவு விடுதிக்கு திரும்பி வந்து அறையை பார்த்தபோது அறைகதவு உள்பக்கம் தாளிடப்பட்டு இருந்தது கதவை தட்டியும், சத்தம் கொடுத்துப் பார்த்தும் திறக்காததால் கொஞ்சம் பலமாக ஓங்கி உதைத்துள்ளார் அப்போது கதவு திறந்துள்ளது. உள்ளே பார்த்தால் சீலீங்பேனி பெட்சீட்டில் அவளா செளமியா தேவி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைப் பார்த்து தீட்சனா அதிர்ச்சி அடைந்தார். இச்சம்பவம் குறித்து தீட்சனா உடனடியாக விடுதி வார்டன் மற்றும் கல்லூரி நிர்வாகிகளுக்கும் தகவல் தெரிவித்தார்.அதன் அடிப்படையில் துவாக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துவாக்குடி போலீசார் அவளா செளமியா தேவியின் உடலை பார்வையிட்டதோடுகைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர் பின்னர் துவாக்குடி போலீசார் அவளா சௌமியா தேவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.