“உயிருக்கு உத்திரவாதம் இல்லாத உத்தமர் கோவில் மேம்பாலம்”
திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் இருந்து நாமக்கல், சேலம்,
துறையூர் செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ள உத்தமர் கோவில் மேம்பாலத்தில் சாலையில் வடக்கு திசை மற்றும் தெற்கு முறையே 16 மற்றும் 17 ஆக மொத்தம் 33 தெரு மின் விளக்குக் கம்பங்கள் உள்ளன. இதில் இரண்டு கம்பங்கள் முற்றிலும் சேதம் அடைந்து உள்ளன. தற்போது 15 மின் விளக்குகள் இரவில் ஒளிர்வதில்லை. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். மேலும் ஒழுங்கற்ற மின் ஒயர்கள், மின்கம்பங்களில் கழன்று தொங்கும் விளக்கு மூடிகள் என அப்பகுதியில் உயிரிழப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்த நிலையில் குறைபாடுகள் தொடர்பாக இன்று கொள்ளிடம்

காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளரிடம் சாலை பயனீட்டாளர் நல அமைப்பு சார்பாக வரும் செவ்வாய்க்கிழமை (19/04/22) அன்று மாலை 6 மணி அளவில் மேம்பாலத்தில் எரியாத மின்விளக்குகள் உள்ள மின்கம்பத்தில் சாலை பயனீட்டாளர்களின் சாலை பாதுகாப்பினை உறுதிபடுத்த தீப்பந்தம் கட்டி ஒளி ஏற்றும் நிகழ்வு நடைபெற அனுமதி வேண்டி சாலை பயனீட்டாளர் நல அமைப்பு சார்பாக மனு அளிக்கபட்டுள்ளது. எனவே இதற்கு முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பயனற்ற மின் கம்பங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள், சமூக ஆர்வளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.