நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!
திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக பெட்ரோல், டீசல், வீட்டு எரிவாயு சிலிண்டர் உட்பட எரிபொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், பெண்களுக்கெதிரான தொடர் பாலியல் குற்றங்களை கண்டித்தும்,

நாட்டில் அதிகரித்து வரும் சட்டஒழுங்கு சீர்கேடு உட்பட மக்களின் வாழ்வியலை பாதிக்கின்ற திட்டங்களை திணிக்கும் ஒன்றிய, மாநில அரசுகளை கண்டித்தும் திருச்சி மத்திய பேருந்து நிலையம்(அன்னபூரணா உணவகம் அருகில் ) நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.