“சாலையின் நடுவே பள்ளமாக உள்ள பாதாள சாக்கடை மூடி” கீழே விழுந்து காயம் அடையும் வாகன ஓட்டிகள்!
சாலையின் நடுவே பள்ளமாக உள்ள பாதாள சாக்கடை மூடியில் வாகனத்தை விட்டு இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர்.
திருச்சி துர்க்கை அம்மன் கோவில் சப்ஜெயில்- காந்தி மார்க்கெட் செல்லும் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றனர். இந்த சாலையின் ஓரத்தில் ஏராளமான கடைகள், வீடுகள் உள்ளன. இங்கு உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் சாலையின் நடுவே சாலையின் அடிப்பகுதியில் பாதாள சாக்கடை செல்கிறது. இந்த பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு விட்டால் அதனை சரிசெய்யும் வகையில், ஆங்காங்கே சாலையின் நடுவே மூடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மூடிகள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் அவ்வப்போது சாலை அமைக்கும் பணிகள் நடைபெறும்

போது சாலை மேடு பகுதி போலவும், பாதாள சாக்கடை மூடி அமைக்கப்பட்டுள்ள பகுதி பள்ளமாகவும் உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் சாலையின் நடுவே பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே பெரும் அளவில் விபத்து ஏற்படும் முன்பு இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை மூடியை சாலையின் அளவிற்கு சமப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.