“கள்ளக்காதலியை சேர்த்து வைக்கக்கோரி” 10 வயது மகளை கத்தியால் குத்தி, சூடுவைத்தவர் கைது

0 345
Stalin trichy visit

திருச்சி பாலக்கரை பெல்ஸ் மைதான ரயில்வே குடிசைப் பகுதியில் வசிப்பவா் கிருஷ்ணகுமார்(வயது 30). இவரது மனைவி கனகவல்லி(வயது 25), மகள் வா்ஷினி (வயது 10). இந்நிலையில் கிருஷ்ணகுமாருக்கு, அதே பகுதியை சோ்ந்த மற்றொரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டிற்கு மதுபோதையில் வந்த கிருஷ்ணகுமார் தனது மகள் வா்ஷினியை அழைத்து, தனது கள்ளக்காதலியையும் வீட்டில் சோ்த்து வைத்து உனது தாயை வாழச் சொல் எனக்கூறி மிரட்டி உள்ளார். இதற்கு

சிறுமி சம்மதம் தெரிவிக்காததால் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணகுமார் தனது மகள் என்றும் பாராமல் திட்டி கத்தியால் குத்தி, சூடு வைத்துள்ளார். இதில் படுகாயமடைந்த சிறுமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் கனகவல்லி கொடுத்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணகுமாரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.