வேளாண் பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தல்!
திருச்சியில் தமிழ்நாடு மேல்நிலை வேளாண் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் இளங்கோ தலைமை தாங்கினார். செயலாளர் செல்வகுமார், பொருளாளர் சங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்து முடிந்த ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வில் எங்களின் வேண்டுகோளை ஏற்று காலியாக உள்ள அனைத்து வேளாண் ஆசிரியர் பணியிடங்களையும்
காண்பிக்க வழிவகை செய்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, கல்வித் துறை ஆணையர் மற்றும் தொழிற்கல்வி இணை இயக்குனருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். வேளாண் தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு அரசு வேளாண் கல்லூரிகளில் வழங்கிவரும் 5 சதவீத இட ஒதுக்கீட்டை தனியார் கல்லூரிகளிலும் வழங்கி வேளாண் பிரிவு மாணவர்களுக்கு கூடுதலாக 100 இடங்களை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். 10 ஆண்டுகள் பணிமுடித்த
இதர தொழிற்கல்வி ஆசிரியர்கள் 15,600-5,400 தர ஊதியம் பெறுவதற்கான பணப்பலன்களை பெற்றுள்ளனர். அதுபோல வேளாண் ஆசிரியர்களுக்கும் தர ஊதியம் வழங்க வேண்டும். ஆண்டுக்கு 100 பேர் வீதம் 10 ஆண்டுகள் கணக்கிட்டு காலியாக உள்ள 1000 வேளாண் ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பணி விதிகள் உருவாக்கப்படாமல் உரிய கல்வித்தகுதி இருந்தும் நீண்ட காலமாக பதவி உயர்வு இல்லாமல் பணியாற்றி வரும் வேளாண் பட்டதாரி ஆசிரியர்களின் தர ஊதியத்தை உயர்த்தி வழங்க
வேண்டும். வேளாண் தொழிற்கல்வி ஆசிரியர்களாக பணிபுரியும் வேளாண் பட்டதாரிகள் 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். இதுவரை எவ்வித பதவி உயர்வும் இன்றி அதே நிலையில்தான் பணிபுரிகிறோம்.எனவே, மற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதுபோல பதவி உயர்வுக்கான பணி விதிகள் உருவாக்கப்பட வேண்டும் என்பன உள்பட பலர் கலந்து கொண்டனர்.