திருச்சி கருமண்டபம் சக்திநகரை சேர்ந்தவர் ராஜசேகர். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். இந்த நிலையில் இவருடைய வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர், வீட்டில் இருந்த லேப்டாப், ரூ.5 ஆயிரத்தை திருடி கொண்டு தப்பி சென்றார். இதையடுத்து வீடு திரும்பிய ராஜசேகர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, மடிக்கணினி, பணம் திருட்டு
போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இது குறித்து கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து அங்கு பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.