சாலையை கடக்க முயன்ற மூதாட்டி டிப்பர் லாரி மோதி பலி!

0 326
Stalin trichy visit

திருவெறும்பூரில், திருச்சி-தஞ்சை நெடுஞ்சாலையை சுமார் 65 வயது மூதாட்டி ஒருவர் கடக்க முயன்றார். அப்போது கரூரிலிருந்து தஞ்சைக்கு ஜல்லி கற்கள் ஏற்றிச்சென்ற டிப்பர் லாரி மூதாட்டி மீது மோதியதில் அவர் படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் மூதாட்டியை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக

 

இறந்தார். இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்துபோன மூதாட்டி யார்? எதற்காக இங்கு வந்தார்? என விசாரணை செய்து வருகின்றனர். மேலும் சாலை விபத்தில் இறந்துபோன மூதாட்டி பற்றிய விபரம் தெரிந்தவர்கள் திருவெறும்பூர் காவல் நிலையத்தை நேரிலோ அல்லது 9498100673, 9498105056 என்ற மொபைல் எண்களிலோ தகவல் தெரிவிக்குமாறு தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.