திருச்சி காஜாமலை பகுதியில் கே.கே.நகர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த ராகுல்(வயது 21) என்பவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். விசாரணையில் அவர், திருச்சி ரஞ்சிதபுரம் பஸ் நிறுத்தம் அருகில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர் என்பது தெரிய வந்தது. ராகுல் மீது வழக்குப்பதிந்து கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள நகைகளை மீட்டனர்.