பா.ஜ.க. நிர்வாகி, திமுக கவுன்சிலர் உள்பட 8 பேர் மீது வழக்கு!
திருச்சி பொன்நகர் காமராஜர்புரம் ரேஷன் கடையில் பிரதமர் மோடியின் படத்தை பாஜ நிர்வாகிகள் மாட்டினர். இது தொடர்பாக திமுக கவுன்சிலர் ராமதாஸ் உள்ளிட்டோர் சம்பவ இடம் சென்று எதிர்ப்பு தெரிவித்தனர். வாக்குவாதத்தில் ஆரம்பித்த இந்த ரகளை இறுதியில் கைகலப்பில் முடிந்தது. இது தொடர்பாக தங்களை திமுக கவுன்சிலர் ராமதாஸ் உட்பட 5 பேர் தாக்கியதாக கோர்ட் காவல் நிலையத்தில் பாஜ மண்டல்
தலைவர் பரமசிவம் புகார் கொடுத்தார். இதேபோல் ரேஷன் கடைக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டு தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக பாஜவினர் மீது கவுன்சிலர் ராமதாஸ் புகார் கொடுத்தார். இந்நிலையில் பாஜ மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன், மண்டல தலைவர் பரமசிவம் உட்பட 5 பேர், திமுக கவுன்சிலர் ராமதாஸ் உட்பட 3 பேர் என்று மொத்தம் 8 பேர் மீது கோர்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.