முன்னாள் ஊராட்சி தலைவர் வீட்டில் திருட்டு!

0 393
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், முசிறி ஜெயம்கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் முன்னாள் ஊராட்சி தலைவர் தர்மராஜ் (வயது 50). இவர் ஒப்பந்ததாரராக வேலை செய்து வருகிறார். இவர் தனது வீட்டில் கட்டிட வேலைகளுக்கு தேவையான இரும்பு குழாய்கள், மின் மோட்டார்கள் மற்றும் 100 லிட்டர் டீசல் ஆகியவற்றை வைத்திருந்தார். இந்த

 

நிலையில் 2 வாலிபர்கள் தர்மராஜ் வீட்டில் வைத்திருந்த 500 கிலோ எடை கொண்ட இரும்பு குழாய்கள், மின்மோட்டார் மற்றும் 100 லிட்டர் டீசல் ஆகிய வற்றை திருடி சென்றனர். வாலிபர்கள் பொருட்களை திருடி சென்ற காட்சி அங்கு பொருத்தப் பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது. இந்த சிசிடிவி காட்சி உதவியுடன் ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குபதிந்து வாலிபர்களை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.