“இளம் பெண்கள் எதிர்கொள்ளும் ஆபத்துக்கள்” விழிப்புணர்வு!

0 386
Stalin trichy visit

திருச்சி, உறையூர் சி.எஸ்.ஐ. மெதடிஸ்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிஷப் ஹீபர் கல்லூரி சார்பில் “இளம் பெண்கள் எதிர்கொள்ளும் ஆபத்துக்கள்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்சியில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை ராணி மார்கிரட் தலைமை உரை ஆற்றினார். இதில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு விருந்தினராக திருச்சி மாவட்டம், குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு ஆலோசகர் எஸ்.பரமேஸ்வரி மற்றும் காவல் உதவி ஆய்வாளர் கார்த்திக் பிரியா, தலைமை

காவலர்கள் ஜெஸ்ஸி கலா, பிரேமலதா ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு உரை ஆற்றினார்கள். இதில் குழந்தைகளின் உரிமை, பாலியல் வன்கொடுமை, பெண்கள் எதிர்கொள்ளும் இணையவழி பிரச்சினைகளை மேர் கொள்வது பற்றிய விழிப்புணர்வுகள் மாணவர்களிடையே ஏற்படுத்தப்பட்டது. இதில் 300 மாணவிகள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வு பிஷப் ஹீபர் கல்லூரி சமூக பணித் துறை பேராசிரியர் புளோரன்ஸ் ஷாலினி வழிகாட்டுதலின்படி, மாணவி ஒருங்கிணைப்பாளர் ஷா.மேகா சிறந்த முறையில் நடத்தப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.