தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமான நாளை சிறப்பு கிராம சபை!

0 342
Stalin trichy visit

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட் சிகளிலும், தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமான 24ம் தேதி (நாளை) நடை பெறவுள்ள சிறப்பு கிராம சபை கூட்டத்தில் வாக்காளர்களான பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள கலெக்டர் சிவராசு அழைப்பு விடுத்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்ட தரமான குடிநீர் வழங்குதல், முறையான நீர் மேலாண்மை மற்றும் வேளாண்மை பணிகளுக்கு தேவையான நீரை அளித்து நீர் சார்ந்த சூழலை பாதுகாத்தல், இயற்கையின் வளங்கள் மற்றும் பசுமையை நம்முடைய எதிர்கால சந்ததிகளுக்கு கொடுக்கும் வகையில் பாதுகாத்தல், வீடு, தேவையான அடிப்படை வசதிகள் வழங்குதல், தகுதியுடைய அனைவரையும் சமூக பாதுகாப்பு திட்டத்தில் இணைத்தல்,

பாலின சமத்துவ அடிப்படையில் அனைவருக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்துதல், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை வலிமைப்படுத்தி பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துதல், நிலைத்த வளர்ச்சி ஏற்படுத்தி அதன் பயன்களை – பெறும் வகையில் இடைவெளியை குறைத்து தரமான கிராம ஊராட்சி வளர்ச்சிதிட்டத்தை தயாரித்தல், நிலைத்த வளர்ச்சி அடைவதில் இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும் அதிக பங்கு உள்ளதால் அவர்களை முழு உத்வேகத்துடன் முடிவெடுக்கும் செயல்பாடுகளில் ஈடுபடுத்துதல் உள்ளிட்ட இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. தேசிய பஞ்சாயத்து

ராஜ் தினமான நாளை (24ம் தேதி) காலை 11 மணிக்கு திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கிராம சபைக்கூட்டத்தில் அனைத்து வாக்காளர் பெருமக்களும் கலந்துகொண்டு ஊராட்சிகளில் கிராம சபை நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.