திருச்சி மாவட்டம், மருங்காபுரி தாலுகா துவரங்குறிச்சி அருகே உள்ள மருதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜபாண்டி(வயது 37). திருச்சி ஓட்டல் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மீனாட்சி காலை வெளியில் சென்றுவிட்டார். மதியம் வீட்டுக்கு வந்தபோது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு,
வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு 11 பவுன் நகை, ஒரு லட்சம் ரொக்கம், ரவி என்பவரது அறையில் வைக்கப்பட்டிருந்த 40 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.