ரூ.2 ஆயிரத்தை அபேஸ் செய்ய முயன்ற வாலிபர் கைது!
திருச்சி அரியமங்கலம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த தொழிலாளி மாரிமுத்து (வயது 54). இவர் பால்பண்ணை லட்சுமிபுரம் பஸ் ஸ்டாப்பில் துவாக்குடி செல்வதற்காக பஸ்சில் ஏறினார். அப்போது அவரது சட்டைப்பையில் வைத்திருந்த
ரூ.2 ஆயிரத்தை வாலிபர் ஒருவர் அபேஸ் செய்து கொண்டு தப்பியோட முயன்றார். இதையடுத்து அந்த வாலிபரை பிடித்து அரியமங்கலம் போலீசில் மாரிமுத்து ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில், அவர் செந்தண்ணீர்புரம் திருவிக நகரை சேர்ந்த கிளிண்டன்(வயது 31) என்பது தெரியவந்தது. தொடர்ந்து கைது செய்யப்பட்ட கிளிண்டனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.