“திருச்சியில் இரு மடங்கு விலை உயர்வு”; மார்க்கெட் சென்ற அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சி!

0 449
Stalin trichy visit

திருச்சி காந்திமார்க்கெட், உறையூர் லிங்கநகரில் மீன் மார்க்கெட்டுகள் உள்ளன. இங்கு ராமேஸ்வரம், நாகப்பட்டினம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, கேரளாவில் இருந்து அதிகளவு மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படும். தற்போது மீன்பிடி தடைகாலத்தால் மீன்கள் வரத்து குறைந்துள்ளது. கோவா, மங்களூரு, கேரள மாநிலங்களிலிருந்து குறைந்தளவு மீன்களே விற்பனைக்கு வருகிறது. இதனால் மீன்களின் விலை கிடுகிடுவென உயர்ந் துள்ளது. காந்தி மார்க்கெட்டில் ரூ.160க்கு விற்ற சங்கரா மீன் தற்போது

 

ரூ.320லிருந்து 400 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் பாறை மீன் ரூ.400லிருந்து 600ம், வௌ மீன் ரூ.320ல் இருந்து 600ம், இறால் ரூ.300ல் இருந்து 400, 500ம், கிளி மீன் ரூ.320ல் இருந்து 500ம், மத்தி மீன் ரூ.80லிருந்து 200ம், அயிலை ரூ.300ம், கொடுவா ரூ.600 முதல் 700 வரை விற்பனையானது. இறால் ரூ.280, நண்டு 200, பால்சுறா 600, மத்தி 120, வெல மீன் 160, 200, 300, 350 என அளவை பொறுத்து விற்கப்படுகிறது. இதுகுறித்து உறையூர் காசிவிளங்கி மார்க்கெட்டில், காந்தி மார்க்கெட் மீன் வியாபாரிகள் கூறுகையில், மீன்பிடி தடைகாலம் தொடங்கப்பட்டுள்ளதால் 30 வாகனங்கள் வரும் இடத்தில் தற்போது 10 வாகனங்களில் மட்டுமே மீன்கள் வருகிறது. 5 டன் மீன் 2.5 டன்னாக குறைந்துள்ளது. இதனால் கடந்த வாரம் சற்று கணிசமாக இருந்த மீன்கள் விலை இருமடங்காக அதிகரித்துள்ளது. அடுத்தடுத்த வாரங்களில் இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றனர்.

Leave A Reply

Your email address will not be published.