நவல்பட்டு கிராம சபை கூட்டத்தை தடுத்து நிறுத்திய கிராம மக்களால் பரபரப்பு; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

0 535
Stalin trichy visit

தமிழகம் முழுவதும் கரோனா தடைக்கு பிறகு ஊராட்சிகளில் தேசிய ஊராட்சிகள் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 20 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது. இந்நிலையில் நவல்பட்டு ஊராட்சியில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டம் அண்ணாநகர் அடர்வனம் காடு பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் ஜேம்ஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மிகவும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே மக்கள் கலந்து கொண்டனர். அதில் பலர் 100 நாள் வேலைக்கு வருபவர்கள் மற்றும் ஊராட்சியில் பணிபுரிபவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நவல்பட்டு ஊராட்சியின் தலை கிராமமான நவல்பட்டு மக்களுக்கு கிராமசபை கூட்டம் பற்றி ஊராட்சி மன்றத் தலைவர் ஜேம்ஸ் மற்றும் ஊராட்சி எழுத்தர் விக்னேஷ் தகவல் கொடுக்க வில்லை. இதனால் அந்தக் கூட்டம் நடைபெறுவது பற்றி நவல்பட்டு கிராமத்தில் உள்ள சுமார் 5000 மக்களுக்கு தெரியவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து நவல்பட்டு கிராமத்தினர் 

 

விக்னேஷிடம் கேட்டதாகவும், அவர் தங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை வந்தால் வாருங்கள் இல்லையென்றால் போங்கள் என கூறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் நவல்பட்டு கிராம கமிட்டியினர் மற்றும் பொதுமக்கள் உடனடியாக நவல்பட்டு போலீசாருடன் நவல்பட்டு அண்ணாநகர் அடர் வனகாடு பகுதியில் நடந்து வரும் கிராம சபைக் கூட்டம் பற்றி தங்கள் கிராமத்திற்கு முறையாக தெரிவிக்காமல் நடத்துவதால் அந்த கூட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டுமென கூறியதாகவும் அதனடிப்படையில் போலீசார் சம்பந்தப்பட்ட திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோசப் கென்னடி தகவல் கொடுத்ததாகவும் அதன் அடிப்படையில் கூட்டத்தை நிறுத்துமாறு ஜோசப் கென்னடி உத்தரவிட்டதோடு நவல்பட்டு கிராமத்தில் முறையாக கூட்டம் நடத்தப்படும் என கூறியதாக கூறப்படுகிறது. அதனடிப்படையில் நவல்பட்டு கிராமத்தினர் மட்டும் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இந்த நிலையில்

 

நவல்பட்டு கிராமக் கமிட்டி தலைவர் முருகானந்தம் தலைமையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது நவல்பட்டு ஊராட்சியில் சுமார் 15 ஆயிரம் வாக்காளர்கள் 30,000 மக்கள் உள்ளார்கள் என்றும் இந்த நிலையில் நவல்பட்டு ஊராட்சியின் தலை கிராமமாக உள்ள நவல்பட்டு கிராமத்தில் 5 ஆயிரம் மக்கள் தொகைக்கு மேல் உள்ளதாகவும், இந்த நிலையில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் நவல்பட்டு அண்ணாநகர் பகுதியில் இருந்து போட்டியிட்ட ஜேம்ஸ் என்பவர் வெற்றி பெற்றதால் நவல்பட்டு பொதுமக்கள் அவருக்கு வாக்கு செலுத்தவில்லை என கூறி நவல்பட்டு மக்களை புறக்கணிப்பதாகவும் இதுவரை ஊராட்சி மன்ற தலைவர் எந்தவித வளர்ச்சியும் பணியும்

 

மேற்கொள்ளவில்லை. இந்த ஊராட்சியின் நவல்பட்டு தலை கிராமத்தின் மூலமாக தான் ஊராட்சிக்கு வருமானமே பெரிய அளவில் வருவாய் வருவதாகவும் ஆனால் இந்த கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு சரியாக 100 நாள் வேலை தருவதில்லை என கூறப்படுகிறது. மேலும் கடந்த 2 வருடங்களில் இங்கு வளர்ச்சிப் பணிகளும் அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளபடவில்லை. இங்கு உள்ள ஊராட்சி அலுவலகத்தை திறப்பதில்லை. இதனால் ஊராட்சி அலுவலகம் கோழிகள் அடையும் இடமாகவும் மாடுகள் படுத்தடுத்து கடக்கும் இடமாகவும் மாறி உள்ளதாகவும், இப்படி ஒருதலைபட்சமாக நடந்து கொள்ளும் ஊராட்சி மன்ற தலைவர் மீதும் அவருக்கு உடந்தையாக இருக்கும் எழுத்தர் மீதும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.