திருச்சி பாலக்கரை எடத்தெரு நடுநெய்கார தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 27). இவர் சம்பவத்தன்று மொபட்டில் பால்பண்ணை சர்வீஸ் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் காந்திமார்க்கெட் போலீசார் வழக்குபதிந்து மதுரை ரோடு ஜெயில்பேட்டை அரவிந்த்(எ) ஜாம்பர் (20), கிருஷ்ணாபுரம் ரோடு சமீர்அகமது(19) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இதேபோல் திருச்சி இபி ரோடு செல்வ விநாயகர் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (62). இவர் சாலை ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை முன் உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்குவந்த தில்லை நகர் காந்திபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (22) என்பவர்
அவர் வைத்திருந்த பணம் ரூ.1,520-ஐ கத்தியை காட்டி மிரட்டி பறித்து சென்றார். இது குறித்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.
திருச்சி வடக்கு தாரா நல்லூர் பகுதியை சேர்ந்த வர் சிவானந்தம் (53). இவர் செங்குளம் காலனியில் உள்ள ரேசன் கடை எதிரே நின்றிருந்தார். அப்போது அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி 2 பேர் பணம் கேட்டு மிரட்டினர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் 2 பேரையும் பிடித்து பாலக்கரை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குபதிந்து, மிரட்டிய அதே பகுதியை சேர்ந்த
சிவானந்தம்(28). பாலக்கரை அம்பேத்கர் நகரை சேர்ந்த பிரவீன்(21) ஆகிய 2 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் தனிதனியே நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.