திருச்சி ஆப்பிள் மில்லட் சிறுதானிய உணவகத்தின் 9-வது ஆண்டு துவக்க விழா!
திருச்சி ஆப்பிள் மில்லட் சிறு தானிய உணவகத்தின் 9-வது ஆண்டு துவக்க விழா மற்றும் திருச்சி AlWO மையம் அறிமுக விழா நடைபெற்றது. இதில் தண்ணீர் அமைப்பு மற்றும் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் “இல்லம் தேடி துணிப்பை” என்று விழிப்புணர்வுக்காக மருத்துவர் கு.சிவராமன் தலைமையில் துணிப்பை விழிப்புணர்வு

நிகழ்வு நடந்தது. இதில் மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளரும், தண்ணீர் அமைப்பு செயல் தலைவருமான கே.சி.நீலமேகம், தண்ணீர் அமைப்பு கி.சதிஸ்குமார், தண்ணீர் அமைப்பு நிர்வாகிகள் கவிஞர் தனலெட்சுமி, டாக்டர்.லட்சுமி, மக்கள் சக்தி இயக்க பண்பாளர்கள் எஸ்.ஈஸ்வரன், என்.வெங்கடேஷ், வெ.ரா.சந்திரசேகர் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.