“பழைமையான தோமையார் தேவாலய தேர்பவனி”; ஆயிரக்கணக்கானோர் வடம் பிடித்து இழுத்தனர்!

0 284
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டியில் உள்ள தோமையார் மலைத்திருத்தலத்தில் தோமையார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் பாஸ்கா பெருவிழா நடைபெறும். இதேபோல் இந்த ஆண்டும் கடந்த 22ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி நடைபெற்றது. கோவில்

அருகே நிறுத்தப்பட்டிருந்த அலங்கரிக்கப்பட்ட தேரில் உயிர்த்த ஏசு மற்றும் தோமையார் சொரூபம் வைக்கப்பட்ட பின்னர் தேர் புனிதநீர் தெளித்து மந்திரிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆலயம் அருகே இருந்து புறப்பட்ட தேர் ஊரை சுற்றி மீண்டும் நிலையை வந்தடைந்தது. இந்த தேர் பவனியின் போது பலரும் ஆட்டம் ஆடி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தனர். தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.