ஸ்ரீ பாலாம்பிகா சமேத மாற்றுரைவரதீஸ்வரர் கோவிலில் 33 ஆண்டுகளுக்கு பிறகு தேர் வெள்ளோட்டம்!

0 378
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி கிராமத்தில் முயலக நோயை
(வயிற்று வலி) அகற்றி அருள்பாலிக்கும் பிரசித்திபெற்ற ஸ்ரீ பாலாம்பிகா சமேத
மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும்
வைகாசி விசாகத்தை முன்னிட்டு தேரோட்ட விழா நடைபெறுவது வழக்கம். இக்கோவிலின்
திருத்தேர் பழுதடைந்த காரணத்தினால் கடந்த 33 ஆண்டுகளாக தேரோட்டம்
நடைபெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய
தேர் கட்டும் பணி தொடங்கி முடிவடைந்தது. இதனைத்தொடர்ந்து இன்று திருத்தேர்

வெள்ளோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலை 4
மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்ணியாஹூ வாசனம் உள்ளிட்ட யாக பூஜை
நடைபெற்றது. தொடர்ந்து மகா பூர்ணாஹூதியுடன் தீபாராதனை யாத்ர தானமுடன் உடன்
கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் நூதன ரதத்தில் கலச அபிஷேகம்
நடைபெற்று மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நூதன ரதத்தில்
கடம் வைத்து (வெள்ளோட்டம்) திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பல
ஆண்டுகளுக்கு பின்பு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்
கலந்துகொண்டு மிகுந்த உற்சாகத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.