“நள்ளிரவில் கார் ரேஸ்” கட்டுப்பாட்டை இழந்த கார் புளியமரத்தில் மோதி வாலிபர் பலி; நண்பன் படுகாயம்!

0 500
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தாளக்குடி நாராயணன் காரடன் பகுதியை சேர்ந்த ஜெய்தேவ்(வயது 21) என்பவரும், சமயபுரம் அருகே கூத்தூர் அம்மையப்பா சிட்டியைச் சேர்ந்த அவரது நண்பர் வினோமேத்திவ்(வயது 24) என்பவரும் நேற்று நள்ளிரவு தனித்தனி காரில் சமயபுரம் நெ.1 டோல்கேட்டில் இருந்து திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை லால்குடி நோக்கி புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். நள்ளிரவு நேரம் என்பதால் சாலை போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. அப்போது நண்பர்கள் இருவருக்கும்

 

இடையே காரில் யார் முன்னே செல்வது என போட்டா போட்டி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இரண்டு பேரும் சாலையில் அதிவேகமாக காரை இயக்கினர். இரண்டு பேரின் கார்களும் சாலையில் சமமாக வந்தபோது மாந்தோப்பு என்ற பகுதியில் திடீரென இரண்டு கார்களும் ஒன்றுடன் ஒன்று உரசிக்கொண்டதால் ஜெய்தேவ் ஓட்டிச் சென்ற கார் சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் வேகமாக மோதி முன்பக்கம் முற்றிலும் அப்பளம்போல் நொறுங்கியது. இதில் ஜெய்தேவ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வினோமேத்திவ் ஓட்டி வந்த கார் எதிரே

 

வந்த சரக்கு வேனின் மீது மோதிவிட்டு சிறிது தூரம் சென்று சாலையோரத்தில் நின்றது. இதில் அவர் உடலில் பலத்த காயமடைந்தார். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கொள்ளிடம் போலீசார் விபத்தில் சிக்கி பலியான ஜெய்தேவ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகவும், விபத்தில் படுகாயமடைந்த வினோமேத்திவை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த கொள்ளிடம் போலீசார் மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.