இலவச வீட்டுமனைக்கு ரூ.750 லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளருக்கு 4 ஆண்டு சிறை; ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

0 398
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் சேருகுடியை சேர்ந்த விவசாயி முனிசாமி ன்பவர் கடந்த 2004ம் ஆண்டு இலவச வீட்டுமனை கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.
அப்போது தும்பளம் வட்ட வருவாய் ஆய்வாளராக இருந்த புஷ்பவள்ளி என்பவர் இலவச வீட்டுமனை பட்டாவை பரிந்துரை செய்வதற்காக ரூ.750 லஞ்சம் பெற்றுள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு

 

செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பவள்ளிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த சம்பவம் அரசு ஊழியர்களுக்கு இடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.