மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள போட்டி; கலெக்டர் தொடங்கி வைத்தார்!
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான குழு மற்றும் தடகள விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். அருகில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசுகந்தி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் ஆகியோர் உள்ளனர். இதில் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
