ஹாரன் அடித்ததால் ஆத்திரம்; வேனை உடைத்த 7 பேர் கைது!

0 362
Stalin trichy visit

திருச்சி காட்டுப்புத்தூர் அருகே சீலைபிள்ளையார் புத்தூர் மாரியம்மன் கோயில் திருவிழாவில் சந்தனக்காப்பு விழா நடந்தது. அப்போது தனியார் ஸ்பின்னிங் மில் வேன் 34 பெண்களை வேலைக்காக ஏற்றிக்கொண்டு அவ்வழியே வந்தது. வேனைகூன்ராக்கம்பட்டி கோபால் ஓட்டி வந்தார். திருவிழாவில் கூட்டம் அதிகம் இருந்ததால் கோபால் ஹாரன் அடித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த இளைஞர்கள் வேனின் கண்ணாடியை உடைத்தனர். இதில்

 

வேனில் இருந்த கிருஷ்ணாபுரம் மீனாட்சி (வயது 55) காயம் ஏற்பட்டது. இவர் காட்டுப்புத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து மோகனூரைச் சேர்ந்த கோபி(32) கொடுத்த புகாரில்காட்டுப்புத்துார் போலீசார் வழக்குப்பதிந்து பிள்ளையார்புத்தூரை சேர்ந்த தீபன்(23), பிரபாகரன்(29), பிரவீன் (20), முருகேசன் (21), சிவசங்கர்(21), நாகராஜ்(23), சதீஸ்(33) ஆகிய 7 பேரை கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.