“முசிறியில் சார்பு நீதிமன்றம் அமைக்க அரசு அனுமதித்துள்ளது பாராட்டுக்குரியது” தலைமை நீதிபதி பேச்சு!
திருச்சி மாவட்டம், முசிறியில் கூடுதல் மாவட்ட உரிமையில் நீதி மன்ற திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருச்சி மாவட்ட தலைமை நீதிபதி பாபு தலைமை ஏற்று புதிய கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற அறையை திறந்து வைத்து பணிகளை துவக்கி வைத்தார். முதன்மை சார்பு நீதிபதி விவேகானந்தன், முசிறி உரிமையியல் நீதிபதி வேலுச்சாமி, முசிறி கோட்டாட்சியர் மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சி குற்றவியல் நீதிபதி சாந்தி வரவேற்றுப் பேசினார். அரசு வழக்கறிஞர் சப்தரிஷி,
முசிறி வழக்கறிஞர் சங்க தலைவர் பாஸ்கரன், துணைத் தலைவர் கணேசன், செயலாளர் சந்திரசேகரன், இணை செயலாளர் தமிழ்ச்செல்வன், பொருளாளர் ரெங்கராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவில் தலைமை நீதிபதி பாபு பேசும்போது, வழக்கறிஞர்கள் வழக்குகளை விரைந்து நீதிமன்றம் முடிக்கும் வகையில் வழக்கறிஞர்களின் செயல்பாடு இருக்க வேண்டும். முசிறியில் சார்பு நீதிமன்றம் அமைப்பதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது வரவேற்கத்தக்கது. இந்த கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மூலம் வழக்காடிகளுக்கு விரைந்து நியாயம் கிடைக்கும் என்று பேசினார். இறுதியில் திருச்சி முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி மோகனப்பிரியா நன்றி கூறினார். விழாவில் குற்றவியல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதிகள்,நீதிமன்றம் நடுவர்கள், மூத்த வழக்கறிஞர்கள், சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.