தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டி பேனா, பென்சில் வழங்கிய கவுன்சிலர் செந்தில்!
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வழிகாட்டுதலின் படி மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் தனது 43-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் பர்மா காலனி முத்து மாரியம்மன் கோயிலில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை முன்னிட்டு மாணவச் செல்வங்கள் அனைவரும் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைய வேண்டி கோயில் நிர்வாகம் சார்பில் நடைபெற்ற யாகப்பூஜை மற்றும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பேனா பென்சில் இரப்பர், ஷார்ப்னர், ஸ்கேல் போன்ற தேர்வுக்கு தேவையான அடிப்படை பொருட்களை வழங்கினார். அப்போது அம்மன் குமார், வினோத்குமார் மற்றும் கோயில் முக்கியஸ்தர்கள், கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர். தொடர்ந்து தனது

வார்டுக்குட்பட்ட பகுதியில் காவேரி நகர் அம்பேத்கர் தெருவில் குடியிருக்கும் கழக முன்னோடி பால்ராஜ் தந்தையாரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பர்மா காலனி அண்ணா தெருவில் சாக்கடையை முழுமையாக சுத்தம் செய்து தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார். இதையடுத்து தெற்கு காட்டூர் ஹஜ்ரத் பிலால் மஜித் மசூதியில் நோம்பு தினத்தை முன்னிட்டு அவர்களின் அழைப்பினை ஏற்று நேரில் சென்று அவர்களுடன் கஞ்சி குடித்து கலந்துரையாடிய போது கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.