திருச்சி முடுக்குப்பட்டி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் நாகராஜ்(வயது 21). இவர் பொன்மலைபட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். அந்த மாணவி பள்ளிக்கு சென்று வரும் போதும், கணினி வகுப்புக்கு சென்று வரும் போதும், நாகராஜ் வழிமறித்து தான் காதலிப்பதாக கூறி அந்த மாணவியை தொந்தரவு செய்துள்ளார். மாணவி காதலிக்க மறுத்ததால் நாகராஜ் கழுத்தை அறுத்துக்கொண்டு மாணவியின் மோதிரத்தை வாங்கி வைத்துக்கொண்டு காதலிக்க வற்புறுத்தி
உள்ளார். இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து கடந்த 27ம் தேதி இரவு மாணவியின் பெற்றோர் நாகராஜின் வீட்டுக்கு சென்று நடந்த சம்பவம் குறித்து நாகராஜின் பெற்றோரிடம் புகார் தெரிவித்து தட்டிக்கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த நாகராஜ், அங்கிருந்த பாட்டிலை உடைத்து மாணவியின் தந்தையின் கையில் குத்திவிட்டு ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த மாணவியின் தந்தை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.