மீன் பிடிக்க ஆழம் பார்த்த வாலிபர் குளத்தில் மூழ்கி பலி!

0 414
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள ரெங்ககவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் குமார்(வயது 32). இவர் ஆவிக்காரபட்டியில் உள்ள வட்டாவி குளத்தில் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது வலை வீசுவதற்காக குளத்தில் இறங்கி நீரின் ஆழம் பார்க்கச் சென்றுள்ளார். ஆழமான பகுதிக்குச் சென்ற குமார் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியுள்ளார். நீரின் உள்ளே சென்ற குமார் மீண்டும் வெளியே வராததைக்கண்டு அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் கூச்சலிட்ட நிலையில் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து குமாரை மீட்க முயன்றும் முடியாததால் உடனே இதுகுறித்து மணப்பாறை தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்குச்

 

சென்ற தீயணைப்புத்துறையினர் அப்பகுதி இளைஞர்களுடன் சேர்ந்து நீண்ட நேரம் போராடி நீருக்கடியில் இருந்து குமாரின் உடலை மீட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மணப்பாறை போலீசார் குமாரின் உடலை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.