மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து லால்குடியில் மண்டை ஓட்டுடன் ஆர்ப்பாட்டம்!

0 384
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி ரவுண்டானாவில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் தலைமையில் மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

கர்நாடக மாநிலம் காவிரியாற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட அனுமதிக்கக் கூடாது, 3 புதிய வேளாண் சட்ட மசோதாக்களை ரத்து செய்ய வேண்டும். தச்சங்குறிச்சி கிராமத்தில் உள்ள செட்டி ஏரி மற்றும் இரண்டு குமுளிகள்,பாசன வாய்க்கால் அதனை சுற்றியுள்ள பட்டா விளைநிலம் ஆகியவற்றை தனிநபர் ஆக்கிரமித்து தடுப்பு வேலி போட்டுள்ளதை அகற்றக் கோரியும்

 

லால்குடி பகுதியில் உள்ள வாய்க்கால்களை தூர்வாரி பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்  என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் லால்குடி, புள்ளம்பாடி விவசாய சங்க நிர்வாகிகள்,பிரதிநிகள் என 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறியhttps://chat.whatsapp.com/GHoBSZRd0IRL3LL0595Pg8

Leave A Reply

Your email address will not be published.