சிறுகாம்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1.20 லட்சம் மதிப்பில் புதிதாக குடிநீர் தொட்டி மற்றும் குடிநீர் குழாய்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகாம்பூர் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூபாய் 1.20 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டி மற்றும் குடிநீர் குழாய் திறப்பு விழா இன்று நடைபெற்றது..

சிறுகாம்பூர் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 147 மாணவிகள், 128 மாணவர்கள் என 275 மாணவ மாணவிகளுடன், ஒரு தலைமையாசிரியர் 7 ஆசிரியர்களுடன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு குடிநீருக்காக மிகவும் அவதியடைந்தனர். . இதை அறிந்த பெற்றோர்கள் புதிய குடிநீர் தொட்டி மற்றும் குழாய் அமைக்க முடிவு செய்தனர். அதன்படி பெற்றோர்கள் நிதி பங்களிப்புடன் ரூபாய் 1.20 லட்சம் மதிப்பில் புதிய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டுக்காக இன்று மண்ணச்சநல்லூர் வட்டார கல்வி அலுவலர் இன்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் பள்ளி மாணவ-மாணவிகள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.