பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

0 254
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் உள்ள அரசு மதுபானக்குடோன் முன்பு சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது. அதனை தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சுமைப்பணி தொழிலாளர் சங்க தலைவர் ஜெயபால் தலைமை வகித்தார். துணை தலைவர்கள் வெங்கடேசன், முருகானந்தம், துணை செயலாளர்கள் தர்மராஜ், விக்கிரம சோழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு புறநகர் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், சிஐடியு புறநகர் மாவட்ட செயலாளர் சிவராஜ், துவாக்குடி டாஸ்மாக் குடோன் செயலாளர் செல்லதுரை ஆகியோர் போராட்டம் குறித்து விளக்கி கூறினார்கள். சிஐடியு தொழிற்சங்க மாநில தலைவர் குணசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு,

சிஐடியு தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்து பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் லாரியில் ஏற்றப்பட்டும் பெட்டி ஒன்றுக்கு ரூ.3.50 வழங்க வேண்டும். பெட்டிகளை கையாளும் பொழுது உடையக்கூடிய பாட்டில்களுக்கு கையாலும் போது உடைவதால் ஏற்படும் நஷ்டம் என்ற பெயரில் தொழிலாளர்களிடம் வசூல் செய்யும் போக்கை கைவிட வேண்டும். பெட்டிகளை இறக்கும் சாலையை செப்பனிட வேண்டும். மழை நேரங்களில் மதுபான பெட்டிகளை இறக்க, ஏற்ற வகையில் மேற்கூரை அமைக்க வேண்டும். பெட்டிகளை ஏற்றி இறக்கும் அனைத்து

 

இடங்களிலும் மேற்கூரை அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் கடைகளை தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். முடிவில் தொழிற்சங்க பொருளாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.