“குண்டும், குழியுமான சாலை” நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடையும் மாணவிகள்; கண்டுகொள்வார்களா? அதிகாரிகள்…!

0 319
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பாரில் இருந்து கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட குமரேசபுரம் பகுதி வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரும் சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மாணவிகள் சிலர் சைக்கிளில் செல்லும்போது இந்த

சாலையில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கூத்தைப்பார் மற்றும் கிருஷ்ண சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட குமரேசபுரம் சாலையை புதுப்பித்து தரவேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும், பள்ளி செல்லும் மாணவ மாணவிகளும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.