வியாகுல அன்னை ஆலய ஆண்டு பெருவிழா தேர்பவனி!

0 319
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி கிராமத்தில் வியாகுல அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆண்டு பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் திருவிழா தொடங்கி நடைபெறுகிறது. முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணி அளவில் வடுகர்பேட்டை பங்குத்தந்தை தங்கசாமி அடிகளார் தலைமையில் விரகாலூர் மெயின்ரோட்டில் இருந்து அன்னையின் நற்பணி மன்ற இளைஞர்கள் சார்பில் தீபம் தொடர் ஓட்டமாக கொண்டு வரப்பட்டு புனித கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து 23ம் தேதி சனிக்கிழமை பங்குதந்தை ஹென்றிபுஷ்பராஜ் தலைமையிலும், 24ம் தேதி விளாகம் பங்குத்தந்தை பெஞ்சமின் தலைமையிலும், 25ம் தேதி தொன்போஸ்கோ மாணவர் இல்ல பங்கு தந்தை பிரான்சிஸ் அமலதாஸ் தலைமையிலும், 26ம் தேதி செவ்வாய்க்கிழமை கொன்னைக்குடி பங்குதந்தை ஜெயராஜ் தலைமையிலும், 27ம் தேதி புதன்கிழமை புனித பீட்டர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராபர்ட் செல்வன்

 

தலைமையிலும், 28ம் தேதி வியாழக்கிழமை மண்ணின் மைந்தர்கள் தலைமையில் சப்பர பவனியும், 29ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணி அளவில் கோவாண்டகுறிச்சி பங்குதந்தை மைக்கேல் தலைமையில் வேண்டுதல் சப்பர பவனியும், 30ம் தேதி சனிக்கிழமை மாலை 6.30 மணி அளவில் கும்பகோணம் மறைமாவட்ட பொருளாளர் சிங்கராயர் தலைமையில் 5 புனிதர்களின் அலங்கார சப்பர பவனி நடைபெற்றது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நவநாள் திருப்பலி நடைபெற்றது. நிகழ்வின் சிகர நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணி அளவில் பங்குதந்தை ஹென்றிபுஷ்பராஜ் தலைமையில் திருவிழா திருப்பலியும் மாலை 6.30 மணி அளவில் அன்னையின் சொரூபம் தாங்கிய மின் அலங்கார ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. புள்ளம்பாடி மறைவட்ட முதன்மைகுரு சூசை மாணிக்கம் தேரினை

 

புனிதப்படுத்தி தொடங்கி வைத்தார். தேர் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. பக்தர்கள், பொதுமக்கள் அவரவர் வீடுகளின் முன்பு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர். விழாவையொட்டி ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கு பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது. வாணவேடிக்கையும், இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Leave A Reply

Your email address will not be published.