வேம்பழகு மாரியம்மன் கோவில் குளுமை பூஜை விழா!
திருச்சி மாவட்டம், துறையூரில் வேம்பழகு மாரியம்மன் கோவில் குளுமை பூஜை விழா நடைபெற்றது. இதையொட்டி மாரியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து

அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் மாரியம்மனை எழுந்தருளச் செய்து வீதி உலா நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.