தேர்வு எழுதச் சென்ற பள்ளி மாணவி சாலை விபத்தில் பலி

0 535
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிக்சாண்டார் கோயில் ஊராட்சியில் உள்ள உத்தமர்கோவில் மேம்பாலத்தில் தேர்வு எழுத சென்ற பள்ளி மாணவி சாலை விபத்தில் பலியானார்.

மண்ணச்சநல்லூர் காசிக்கடை தெருவைச் சேர்ந்த முருகேசன் மகள் ஸ்ரீவேதநாயகி(16). இவர் நெ.1டோல்கட் அருகே கூத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா பள்ளியில் சிபிஎஸ்சி 10ம் வகுப்பு படித்து வருகிறார்.

இன்று நடைபெறும் சிபிஎஸ்சி பொதுத்தேர்வு எழுதுவதற்காக
அவரது சகோதரர் கரணுடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். உத்தமர்கோவில் மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்த போது . ஸ்ரீரங்கத்திலிருந்து அத்தானி நோக்கிச் சென்ற பைக் எதிரே வந்த ஸ்கூட்டர் மீது மோதியது.இதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் கரனும்,வேதநாயகியும் படுகாயமடைந்தனர்.விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த வேதநாயகி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.அவரது அண்ணன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் மேலும் பைக்கில் வந்த பள்ளி மாணவி மற்றும் அவருடைய உறவினருக்கும் காயம் ஏற்பட்டது அவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் விபத்தில் பலியான வேதநாயகி உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

Leave A Reply

Your email address will not be published.