இஸ்ரோ முன்னாள் தலைவர் ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம்!
தமிழகத்தின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரியின் சரக்கால்விளை கிராமத்தை சேர்ந்தவர் சிவன்.2018ம் ஆண்டு இஸ்ரோவில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இஸ்ரோவின் ராக்கெட் மேன் என செல்லமாக அழைக்கப்படும் சிவன், 2017ம் ஆண்டு 104 செயற்கைக்கோள்களை ஒரே ராக்கெட்டில் அனுப்பிய உலக சாதனையில் முக்கிய பங்காற்றியவர்.

இந்த நிலையில் 108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் இன்று இஸ்ரோவின் முன்னாள் தலைவர் சிவன் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக சுவாமி தரிசனம் செய்ய வந்த இஸ்ரோவின் முன்னாள் தலைவருக்கு கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் வரவேற்பு அளித்தனர்.