தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த பசுமாடு மீட்பு

0 514
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள பர்மா காலனியில் தண்ணீர் குடிக்க வைத்து பசுமாடு தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த்து. சமயபுரம் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

சமயபுரம் பர்மாகாலனியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் இவர் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் இன்று காலை தண்ணீர் குடிக்க வந்த பசுமாடு தவறி விழுந்தது. தண்ணீர் தொட்டிக்குள் சிக்கிக்கொண்டதால் பசும்மாட்டால் வெளியே வர முடியவில்லை. இதுகுறித்து சமயபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு துணையிருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சமயபுரம் தீ தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமையில் சிறப்பு நிலை அலுவலர்கள் ஜீவா,பழனிசாமி சிறப்பு நில போக்குவரத்து ரவிக்குமார், பிரான்சிஸ் அலெக்சாண்டர் வீரர்கள் சதீஷ்குமார், பெரியசாமி, திவாகர், விக்னேஷ் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பின் பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.