கூட்டுறவுத்துறை ஊழியருக்கு 5 ஆண்டு சிறை….20,000 அபராதம்!
திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச் சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கைத் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், பெண்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்.
கடந்த 06.05.2019ந் தேதி ஸ்ரீரங்கம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட திருவளர்சோலையில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவுதுறை கடன் சங்கத்தில் செயலராக பணிபுரியும் பெண் ஒருவரை,அவருக்கு கீழ் பணிபுரியும் ஊழியர் ஒருவர் அசிங்கமாக திட்டியும், குற்றங்கருதி மிரட்டல் விடுத்தும், பெண்ணை துன்புறுத்தியதாக ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் பெறப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வழக்கின் புலன் விசாரணையை முடித்து எதிரி வின்சென்ட் வயது 54 த.பெ.சபரிநாயகம் மீது கடந்த 16.05.2019-ந்தேதி இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேற்படி வழக்கில் திருச்சி கூடுதல் மகினா நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதிபதி மணிவாசகன் விசாரணையை முடித்து 17.05.22-ம்தேதி, எதிரிக்கு ச/பி 294(b) இதசன்படி ரூ.5,000/- அபராதமும், ச/பி 506(i) இதன்படி 2 வருட சிறை தண்டனை மற்றும் ரூ.5,000/- அபராதமும், ச/பி 4 of women Harassment இதன்படி 3 வருட சிறை தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதமும் (ஆக மொத்தம் 5 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.20,000/ அபராதம்) விதித்து தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கில் அரசு வழக்கறிஞர் கரிகாலன் ஆஜரானார்.
இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்த ஸ்ரீரங்கம் காவல் ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிதர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் வெகுவாக பாரட்டினார்.