TNPSC & UPSC தேர்வுகளுக்கு படிக்கும் திருச்சி மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!

0 1,049
Stalin trichy visit

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் மற்றும் TNPSC குரூப் 1 & 2 தேர்வுகளுக்கு தயாராவது குறித்து ஒரு நாள் பயிற்சி வகுப்பு திருச்சி நேஷனல் கல்லூரியில் வரும் 22ம் தேதி நடைபெறுகிறது. இந்த வகுப்பில் குடிமைப் பணியில் உள்ள மூத்த அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு வழிகாட்டுதல்களை வழங்குகின்றனர்.

நியூஸ் 7 தமிழ் மற்றும் கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுகளான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் உள்ளிட்ட தேர்வுகள் மற்றும் TNPSC போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்கள் எப்படி தயார் செய்ய வேண்டும் என்பது குறித்த ஒரு நாள் பயிலரங்கை நடத்துகிறது. திருச்சி மாநகரில், வருகிற 22ம் தேதி நேஷனல் கல்லூரியில் காலை 9 மணிக்கு தொடங்கும் பயிலரங்கில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்  சுஜித்குமார் IPS, வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் நந்தகுமார் IRS கலந்து கொள்கின்றனர். இந்த பயிற்சி பட்டறையில், கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகடாமியின் தலைவர்  பூமிநாதன் மற்றும் அதன் ஆசிரியர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர். இந்த பயிற்சி பட்டறையில் கலந்து கொள்ள அனுமதி இலவசம், மாணவர்கள் 94442 27273 என்ற எண்ணில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.