காதலிப்பதாக கூறி செருப்பால் அடித்ததால் ஆத்திரம் : கல்லூரி மாணவிக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து வலுக்கட்டாயமாக குடிக்க வைத்த 3 பேரை தேடும் போலீஸ்

0 446
Stalin trichy visit

திருச்சி திருவெறும்பூர் அருகேகல்லூரி மாணவியை காதலிப்பதாக கூடியவரை செருப்பால் அடித்ததால் பலிவாங்க நண்பர்களுடன் கல்லூரி மணவிக்கு வலுகட்டாயமாக குளிர் பணத்தில் விசம் கலந்து கொடுத்த? என 3 பேரை பெல் போலீசார் தேடி வருகின்றனர்.

திருவெறும்பூர் அருகே உள்ள நொச்சி வயல் புதூரை சேர்ந்தவர் ஆனந்தன் இவரது மகள் வித்யா லட்சுமி (19) இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் வித்யா லெட்சுமி பெல் பகுதியில் உள்ள மணியம்மை நகரில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கி கல்லூரிக்கு தினமும் சென்று வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வயிற்று வலி மற்றும் உடல் சோர்வு காரணமாக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு வித்யா லட்சுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வித்யா லட்சுமியின் வயிற்றில் விஷம் இருப்பது தெரியவந்துள்ளது.

இது சம்மந்தமாக மருத்துவமனை நிர்வாகம் பொலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்துள்ளனர்.

அதன் அடிப்படையில் பெல் போலீசார் மருத்துவமனைக்கு சென்று வித்யாலட்சுமி இடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

பெல் போலீசாரிடம் வித்யா லட்சுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கல்லூரி முடித்து வீட்டிற்கு வந்தபோது அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் வித்யாலட்சுமியிடம் காதலிப்பதாக கூறியதாகவும்
அதற்கு வித்யாலட்சுமி அந்த வாலிபரை செருப்பால் அடித்ததாகவும்.

இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி வித்யா லட்சுமி கல்லூரி முடித்துவிட்டு வீட்டிற்கு சென்ற பொழுது அடையாளம் தெரியாத 3 வாலிபர்கள் வித்யா லெட்சுமியை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று அருகில் உள்ள ஒரு சந்தில் வைத்து விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதில் பாதிக்கப்பட்ட வித்யாலட்சுமி கடந்த 13ம் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும், பின்னர் வெளி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வித்யாலட்சுமி வயிற்று வலி மற்றும் உடல் சோர்வு அதிகமாகவும் கடந்த 17ஆம் தேதி திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதாகவும்பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெல் போலீசார் இச்சம்பவம் குறித்து மர்ம நபர்கள் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

மேலும் வித்யாலட்சுமி தன்னை காதலிப்பதாக கூறியவனை செருப்பால் அடித்ததால் அந்த வாலிபர் ஆத்திரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து இது போன்ற செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இருந்தாலும் குற்றவாளிகள் பிடிபட்ட பிறகு வித்யாலட்சுமிக்கு எதற்காக விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்தார்கள் அவர்கள் யார் என்பதும் தெரியவரும்

இச்சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave A Reply

Your email address will not be published.