திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி மீனாட்சி மஹால் அருகே பைக்கில் வந்த நபர் மீது பின்னால் வந்த தனியார் பேருந்து மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

புள்ளம்பாடி அருகே வெங்கடாசலபுரம் மிஷன் தெருவை சேர்ந்தவர் அந்தோணிசாமி.இவருடைய மகன் 40 வயதான இளையராஜா. இவர் தனது இருசக்கர வாகனத்தில் வெங்கடாசலபுரத்திலிருந்து புள்ளம்பாடியை நோக்கி வந்துகொண்டிருந்தார்.அப்போது திருமானூரிலிருந்து திருச்சி நோக்கி வேகமாக வந்த தனியார் பேருந்து இளையராஜா சென்ற பைக் மீது மோதியது் இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த கல்லக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் பலியான இளையராஜா உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்க்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தனியார் பேருந்தை ஓட்டி வந்த பெரம்பலூர் மாவட்டம் அடைக்கம்பட்டி வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த 42 புஷ்பராஜ் என்பரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.