கொலை முயற்சியில் ஈடுபட்ட ரவுடி குண்டர் சட்டத்தில் கைது

0 455
Stalin trichy visit

ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருவானைக்கோவில் பெட்ரோல் பங்க் அருகில் கடந்த 22.04.22-ஆம் தேதி நடந்து சென்று கொண்டிருந்த ஒருவரை முன்விரோதத்தால் ஆபாச வார்த்தைகளால் திட்டியும், அரிவாளை காட்டியும் கொலை செய்ய முயன்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் எதிரி சந்துரு ( 43)என்பவர் மீது வழக்குப்பதிவு செய்தும், சம்மந்தப்பட்ட எதிரியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விசாரணையில் எதிரி சந்துரு மீது பொதுமக்கள் உயிருக்கும், உடைமைகளுக்கும் கேடு விளைவித்ததாக பல வழக்குகள் கோட்டை மற்றும் ஸ்ரீரங்கம் காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

எனவே, எதிரி சந்துரு என்பவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதும், ஆயுதங்களை கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தி, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர் என விசாரணையில் தெரிய வருவதாலும், மேற்கண்ட எதிரியின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு ஸ்ரீரங்கம் காவல் ஆய்வாளர் அவர்கள் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரியின் மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்தும் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.